ரணிலின் பதவியேற்பைத் தொடர்ந்து குறைந்த அமெரிக்க டொலர் பெறுமதி

0
358
Article Top Ad

இலங்கையில் கடந்த சில வாரங்களாக வேகமாக உயர்வடைந்து வந்த அமெரிக்க டொலரின் விலை, புதிய பிரதமரின் பதவியேற்பைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை குறைவடைந்துள்ளது.

இதன்படி நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் பலவற்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365 ரூபாவாகக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் 377.49 ரூபாவாகவே டொலரின் விற்பனை விலை பதிவாகியிருந்தது.

அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 380 ரூபாவை எட்டியிருந்தது.

இந்நிலையில் அதன் விலை நேற்று 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.