இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். தற்போது மீண்டும் அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தற்போது காம்ப்ளி குடிபோதையில் தனது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட்டைத் தாக்கியதாக சாட்டப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, வினோத் காம்ப்ளி ஒரு நேர்காணலில் தனது அவலநிலை குறித்து கூறினார். அதில் வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். தனது வீட்டை நடத்துவதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும் பயிற்சியாளர் பணி கிடைத்தால் அதை ஏற்க தயார் என்றும் அவர் கூறினார்.
மேலும் அந்த பேட்டியின் போது, போதைப்பொருளால் தனது வாழ்க்கையை நாசம் செய்ததை ஒப்புக்கொண்டார் காம்ப்ளி. இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரும்பவும் தயார் என்றும் கூறினார். தனக்கு பயிற்சியாளர் பணி கிடைத்தால் அதனை சிறப்பாக செய்வேன் என்றும் கூறினார்.
வினோத் காம்ப்ளியின் கேரியர் கிராஃப் ஏறிய வேகத்தில் இறங்கியது. உள்நாட்டு கிரிக்கெட்டில், சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து, 1998 இல் ஹாரிஸ் ஷீல்ட் பள்ளி போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து உலக சாதனை படைத்தார்.வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தபோது கலக்கினார்.
இந்த இடது கை பேட்ஸ்மேன் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். காம்ப்லி 14 இன்னிங்ஸ் விளையாடிய பிறகு 18 நவம்பர் 1994 அன்று 1000 ரன்களை முடித்தார். காம்ப்ளியின் இந்த சாதனை 26 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் உள்ளது.
வினோத் காம்ப்ளியின் முதல் திருமணம் காதலி நோலா லூயிஸுடன் நடந்தது. இதற்குப் பிறகு மாடல் ஆண்ட்ரியா ஹெவிட் அவரது வாழ்க்கையில் இணைந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே பெற்றோரானார்கள். மகன் ஜீசஸ் கிறிஸ்டியானோ காம்ப்ளி பிறந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.