Article Top Ad
அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில்வே துறை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்துக்கு ரயில்வே துறை தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளதால் இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.