ராஷ்மிகா மந்தனா 5 ஆண்டுகளில் கற்றுள்ள பாடங்கள்

0
109
Article Top Ad

தமிழ் தெலுங்கில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்கத் தொடங்கி 5 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 9 பாடங்களைக் கற்றுள்ளதாக அவர் மனந்திறந்துள்ளார்.

ராஷ்மிகா கற்றுள்ள 9 பாடங்கள்,

  1. நேரம் மிக வேகமாக செல்கின்றது. எனவே ஒவ்வொருநாளும் நினைவுகளை உருவாக்க வேண்டும்.
  2. இதயத்தின் அடியிலிருந்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி எனக் கற்றுள்ளேன்.
  3. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் விரும்புவதை அடைய எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
  4. பொறுமையாக இருங்கள். இது கடினமாக இருக்கலாம். ஆனால் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள்.
  5. மற்றவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு எப்போதும் எதுவும் இருக்கும். அதனால் எப்போதும் கற்கத் தயாராக இருங்கள். அப்போது தான் நீங்கள் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
  6. உணர்ச்சிப் பொதிகளை விட்டுவிடக் கற்றுக்கொள்ளுங்கள்.
  7. வாழ்க்கையில் நீங்கள் செயற்பட விரும்பும் விடயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
  8. சுத்தமாக சாப்பிடுவது, நன்றாகத் தூங்குவது, கடினமாக உடற்பயிற்சி செய்வது, பெரிதாக புன்னகைப்பது, வெளிப்படையாக நேசிப்பது.
  9. மக்கள் உங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்க மாட்டார்கள். எனவே நீங்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டியதில்லை. முதலில் உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.