இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவின் அடையாளமாக இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் (Naftali Bennett) இந்த வருடம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டு நட்புறவை விளக்கும் விதமாக, சிறப்பு அடையாள இலட்சனைக்கான போட்டி இரு நாடுகளிலும் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவின் வாரணாசியைச் சேர்ந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர் நிகில் குமார் ராயின் வடிவமைப்பு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஜெருசலேம் தூதரகத்துக்கான இந்திய தூதரக அதிகாரி நாயோர் கிலான் டெல்அவிவ், இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் சிங்லா உடன் சேர்ந்து இணையம் ஊடாக மூலம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த கிலான்,
இந்தியா – இஸ்ரேல் நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. இரு நாடுகளின் 30 ஆண்டு கால நட்புறவை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அடையாள இலட்சனையில் இந்தியா – இஸ்ரேல் நாடுகளின் தேசியக் கொடியில் உள்ள டேவிட், அசோக சக்கரம் இடம்பெற்றுள்ளது.
இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்தாண்டு இந்தியா வருகை தர உள்ளார். கடந்த ஆண்டு இங்கு வந்த ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று பென்னட் இந்தியா வர இருக்கிறார் என்று தெரிவித்தார்.