சீனாவில் வசந்தகால புத்தாண்டு காெண்டாட்டம் ஆரம்பம்

0
340
Article Top Ad

சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்பதற்கு கொண்டாட்டங்கள் நடைபெறும். அதற்காக‌ பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பூமியைச் சுற்றும் நிலவின் கோளப் பாதையின் படி சீனாவில் புத்தாண்டு தீர்மானிக்கப்பட்டு அதன்படி கொண்டாடப்படுகின்றது.

புத்தாண்டு
அதன்படி இந்த வருடம் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் முதலாம் திகதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தைக் கொண்டு மக்கள் கொண்டாடுவார்கள். அதன்படி இந்த வருடம் புலி ஆண்டு. இந்த புலி வடிவம் மக்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று சீனர்கள் கருதுகிறார்கள். புலி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளனர்.

பயணம்
சீன புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி இறுதி வரை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் சீனா முழுவதும் பயணம் செய்வார்கள். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்தங்களை சந்திப்பார்கள். இதனால் சீனாவில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திண்பண்டம்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான தின்பண்டங்கள் தயாரிக்கும் பணிகளும் களைகட்டியுள்ளன. சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக கடந்த ஆண்டு ஓலாங் தேசிய பூங்காவில் பிறந்த 20 பண்டா குட்டிகள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பண்டா குட்டிகள் நடத்திய சேட்டைகள் காண்போரை அவற்றின் மீது காதல் கொள்ள வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்காமல் இருக்க சீன அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதே நேரத்தில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.