Article Top Ad
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும் என்று மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்ரனி ப்ளிங்கன், ரஷ்யாவுக்கு வழங்கியுள்ள உத்தியோகபூர்வமான பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கியுள்ள பதிலை தங்கள் நாடு ஆய்வு செய்துவிட்டு தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்கும் என்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உக்ரைனுடனான எல்லையில் படைகளைத் தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.