வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புறாமலையை அதிகம் விரும்புவது ஏன்?

0
1030
Article Top Ad

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.

  • படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம்.
  • திருகோணமலையில் இருந்து வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.
  • இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.
  • இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது.
  • மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
  • நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன.
  • சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.
  • நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. அதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள். புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.

இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருகை கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.

புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.

இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

சூரிய ஒளியில் Glittering coral சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான். நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.

புறாத்தீவு தேசியப் பூங்கா (Pigeon Island National Park, உள்ளூர் வழக்கு: புறா மலை) என்பது இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்று.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

இத்தேசியப் பூங்கா இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ளது. புறாத்தீவு 1963இல் புகலிடமாகக் குறிக்கப்பட்டது. 2003 இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

இத்தேசியப் பூங்கா இலங்கையில் 17வது தேசியப் பூங்காவாகும். பிரித்தானிய இலங்கையில் இது சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

புறாத்தீவு 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் ஒன்றாகும்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

புறாத்தீவு இரு தீவுகளைக் கொண்டு, பெரிய புறாத்தீவும் சிறிய புறாத்தீவும் ஆக காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டுள்ளது.

சிறிய புறாத்தீவு பாறை திட்டுக்களினால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இத் தேசிய பூங்கா இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்றது. இதன் வருடாந்த வெப்பநிலை 27.0 °C (80.6 °F) ஆகும்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

வருடாந்த மழைவீழ்ச்சி 1,000–1,700 மில்லிமீற்றர்கள் (39–67 in)க்கு இடைப்பட்டதாகும். இது ஒக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிக மழையினைப் பெறுகின்றது.இப் புறாமலையை நிலாவெளி கடற்கரையில் இருந்து கடல் மார்க்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் பார்க்க முடியும்.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Islandபடகு மூலமாக பணம் கொடுத்து இயற்கையின் அழகை ரசிக்கலாம். புறாமலையில் உள்ள கடல் நீரானது கண்ணாடி போன்று தெளிவாக காட்சியளிப்பதுடன் சுழியோடும் அளவுக்கு அங்கு பாதுகாப்பான ஏற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன இது வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்புகள் உட்பட இலங்கை கடற்படையும் அங்கு இதனை பாதுகாத்து வருகிறது.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றமையும் வெளிநாட்டு உள்நாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர்.இதனால் படகு ஓட்டுனர்கள் உட்பட நாட்டுக்கு அந்நியச் செலாவாணி இதன் மூலமாக கிட்டுகின்றது.

Nilaweli%20Puraa%20Malai-Pigeon%20Island

புறா மலையில் உள்ள ஏதாவது பொருட்களையோ கடற்பாசி சிற்பிகளையோ கடல் தாவர இனங்களையோ தம்வசம் வைத்துக்கொள்ளவோ அங்கிருந்து கொண்டுவர முடியாது. தவறுகின்ற பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளமையும் சுற்றுலாப் பிரதேசமாக இது கணிக்கப்படுகிறது.தற்போதைய நிலாவெளி கடற்கரை தொடக்கம் புறாமலை வரையான கடல் பகுதிக்கு இடையில் நடைபெறும் திடீர் நீரில் மூழ்கும் நபர்கள் கரையோர பாதுகாப்பு பொலிஸாரினால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளன.

இக்கரையோர பகுதியை அண்டிய இடங்களில் சொகுசான தங்குமிட ஹோட்டல் அறைகள் என பல இடங்கள் காணப்படுவதும் மேலும் சுறுலாப் பகுதியினருக்கு அழகு சேர்க்கிறது.