பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெறுவது தொடர்பாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நேற்று விளக்கமளித்துள்ளது.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு நிபுணர்களின் ஆலோசனை கோரி சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதனை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை மற்றும் வழக்கமான தொழில்நுட்ப ரீதியாக உதவி மட்டுமே கோரப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று தெளிவுபடுத்தியுள்ளார்.