சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

0
363
Article Top Ad

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தாதிய உத்தியோகத்தர் சங்கமும் ஆதரவு அளித்துள்ளது.

இலங்கை அரசாங்க மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதுபற்றி கூறுகையில்,

நாம் முன்னரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினோம். எமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டது. எங்கள் குறைகளை அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். எனினும், அவர் எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பார்த்துக் கொண்டார்.

இதனால், இன்று காலை முதல் காலவரையறையற்ற தொழிற்சங்கப் போராட்டாத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் – என்றார்.

தாதிய உத்தியோகத்தர்கள் மருத்துவ ஆய்வக ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் குடும்ப சுகாதார அலுவலகர்கள் உட்பட சுகாதாரத் துறைசர் 16 அமைப்புகள் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதுடன் – ரனுக்கே குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், தொழில்முறை பட்டப்படிப்புக்கு பொருத்தமான சம்பள அளவை நிறுவுதல், பொருத்தமான பதவி உயர்வுகளை வழங்கல், சுகாதார நிர்வாக சேவையை செயல்படுத்தல், 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு படையை வழங்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.