மறந்துவிட்ட பாஸ்வேர்டை எளிதில் கண்டுபிடிக்க சில வழிமுறைகள்

0
926
Article Top Ad

உலகளவில் உள்ள பேஸ்புக் பயனர்கள் அவ்வப்போது தங்களின் பேஸ்புக் கடவுச்சொல்லை (Facebook password) மறந்து விடுவது உண்டு. அவ்வாறு மறந்துவிட்ட பாஸ்வேர்டை எளிதில் கண்டுபிடிக்க சில வழிமுறைகள் உள்ளன.

உலகம் முழுவதிலும் இருந்து பேஸ்புக் சமூக வலைதளத்திற்கு என கோடிக்கணக்கான அங்கத்தவர்கள் உள்ளனர். 2004ல் அறிமுகமான பேஸ்புக் ஏனைய அதற்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திய மைபேஸ் ,ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களை மரணப் படுக்கைக்குத் தள்ளிவிட்டு, பேஸ்புக் கோலோச்சியது. தொடர்ந்து கொடுக்கப்பட்ட அப்டேட்டுகள், செய்திகளை எளிதில் அணுகும் முறை வரம்பற்ற கோப்புகள் சேமிப்பு என பேஸ்புக் பயனர்களின் இன்றியமையாத பெட்டகமாகவே மாறியது.

ஆனால், பேஸ்புக் பயனர்களுக்கு எப்போதும் ஒரு பிரச்னை இருந்து வந்தது. அதாவது, ஒரு முறை செயலியில் உள்நுழைந்து (Login), அதன் பின் பாஸ்வேர்டை மறந்துவிடுவது. ஸ்மார்ட்போன் அல்லது கணினியை ரீசெட் செய்யும் போது இந்த தரவுகள் மொத்தமாக அழிந்துவிடும். பயனர்களும் என்ன பாஸ்வேர்டு கொடுத்தோம் என்பதை மறந்துவிடுவார்கள்.

பின்னர் அதனை மீட்பது எளிதான காரியம் என்றாலும், சிலர் பழைய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை மாற்றி இருப்பவர். அவர்களுக்கு கடவுச்சொல்லை மீட்டெடுப்பது என்பது சிரமமான காரியம். அவர்களும் தற்போது சில எளிய வழிமுறைகளை பின்பற்றி மறந்துபோன் பாஸ்வேர்டை மீட்கலாம். அதற்கு அவர்கள் கடவுச்சொல்லை உலாவியில் (Browser) சேமித்திருப்பது அவசியம். அதனை கண்டறியும் வழிமுறைகளைக் காணலாம்.

பேஸ்புக் பயனர்கள் தங்களின் லாகின் விவரங்களை ஒவ்வொரு முறையும் கணக்கில் உள்நுழையும்போது எழுதுவதைத் தவிர்ப்பதற்காக உலாவி அதனை சேமித்து வைப்பதற்கான அனுமதியை கோரும். அதற்கு நீங்கள் அனுமதி அளித்திருந்தால் உங்கள் பாஸ்வேர்டு உலாவியில் பத்திரமாக இருக்கும்.

*முதலில், உங்கள் Google Chrome உலாவியைத் திறக்கவும்.
*மேல் வலது மூலையில், செங்குத்தாக மூன்று புள்ளி இருப்பதை கிளிக் செய்யவும்.
*அதில் செட்டிங்ஸை ‘Settings’ தேர்வு செய்யவும்
*நீங்கள் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்
*அங்கு நீங்கள் தானாக நிரப்புதல் ‘Auto-Fill’ பிரிவின் கீழ் உள்ள ‘Passwords’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
*கணினியில் சில நேரங்களில் கணினியின் லாகின் பாஸ்வேர்டை கோரலாம். அதை உள்ளிடவும்.
*திரையின் மேல் பகுதியில், பூதக்கண்ணாடி அடையாளத்துடன் கூடிய தேடல் பெட்டியைக் (Search Box) காண முடியும்.
*அதைக் கிளிக் செய்து பேஸ்புக்கைத் தேட வேண்டும். அந்த பெட்டியில் ‘Facebook’ என்று தேடுங்கள்
*உடனடியாக அது உங்கள் Facebook கணக்குகளின் பட்டியலை அந்தந்த கடவுச்சொற்களுடன் காண்பிக்கும்
*இது இயல்பாக புள்ளிகளுடன் மறைக்கப்பட்டிருப்பதால், அதை வெளிப்படுத்த கண் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
*இது உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை உடனடியாகக் காண்பிக்கும்.

கூகுளின் கடவுச்சொல் நிர்வாகி (Google Password Manager)

உங்கள் Facebook கணக்கின் கடவுச்சொல்லை Google கடவுச்சொல் நிர்வாகியிலிருந்து மீட்டெடுக்கலாம். கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் தளம், அதன் பயனர்களின் கடவுச்சொற்களை சேமிக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் தொலைந்த அல்லது மறந்துபோன கடவுச்சொல்லை உடனடியாகக் கண்டறியலாம்.

*நீங்கள் Google Password Manager பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
*தொடந்து மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட கணக்கு விவரங்களை சரியாக உள்ளிட்டு உங்கள் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
*நீங்கள் உள்நுழைந்தவுடன், உங்கள் திரையில் நீங்கள் முன்பு சேமித்த கடவுச்சொற்களின் பட்டியலை உடனடியாகக் காண்பிக்கும்.
*பட்டியலின் மேலே உள்ள தேடல் பொறியில் ‘Facebook’ என்று தேடுங்கள்
*முடிவுகள் தோன்றியவுடன், Facebook என்பதை கிளிக் செய்யவும்.
*உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணுடன் இருக்கும் பேஸ்புக் கணக்கின் பக்கத்தில் உள்ள கண் ஐகானை கிளிக் செய்யுங்கள்
*உங்கள் பாஸ்வேர்டு உடனடியாக திரையில் தெரியும்
மொசில்லா ஃபயர்பாக்ஸ் (Mozilla Firefox) மூலம் கடவுச்சொல்லை கண்டறிவது எப்படி?

மொசில்லா ஃபயர்பாக்ஸ் உலாவியைப் பயன்படுத்தி பேஸ்புக் கடவுச்சொல்லைக் எளிதில் கண்டறியவும் முடியும். Mozilla Firefox பயனர்கள் அவர்கள் சேமித்த Login Details பிரிவில் இருந்து தங்கள் கடவுச்சொற்களை திரும்பப் பெறலாம்.

*முதலில் Mozilla Firefox உலாவியைத் திறக்கவும்.
*திரையின் வலதுபுறம் மேல் மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் (Settings) மெனுவைக் திறக்கவும்
*பின்னர் தனியுரிமை & பாதுகாப்பு (Privacy and Security) என்பதைக் கிளிக் செய்யவும்
*உங்கள் திரையில், சேமித்த உள்நுழைவுகள் (Saved Logins) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
*பின்னர் பாஸ்வேர்டுகளை காட்டவும் (Show Password) என்பதை கிளிக் செய்யவும்
*உங்கள் பேஸ்புக் (Facebook) கடவுச்சொல்லை Mozilla Firefox உலாவியில் சேமித்திருந்தால், அது உங்கள் திரையில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களின் பட்டியலின் கீழ் தோன்றும்
*அதிலிருந்து உங்களுக்கு தேவையான கடவுச்சொல்லை மீட்டெடுக்கலாம்

பேஸ்புக் மூலம் கடவுச்சொல்லை மாற்றலாம்

உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் பயன்படுத்திய அதே மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை இப்போதும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எளிதில் உங்கள் பழைய கடவுச்சொல்லை மாற்ற முடியும்.
*Facebook தளம் அல்லது செயலியைத் திறக்கவும்.
*வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்.
*அதில் வரும் பேஸ்புக் செட்டிங்க்ஸை (Facebook Settings) தேர்வு செய்யவும்
*கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு (Password and Security) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
*அங்கு நீங்கள் கடவுச்சொல்லை மாற்று என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்
*அடுத்த பக்கத்தில், உங்கள் தொலைப்பேசி, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டு விருப்பத் தேர்வுகள் தோன்றும்
*அதில், சரிபார்ப்புக் குறியீடு (OTP) அனுப்பவேண்டிய விருப்பத்தை தேர்வு செய்யவும்
*தொடரவும் (Continue) என்பதைக் கிளிக் செய்யவும்
*அடுத்து, புதிய கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்
*பின்னர், அந்த கடவுச்சொல்லை சேமித்து, புதிய கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருக்கவும்

நன்றி: தமிழ் சமயம்