எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது

0
257
Article Top Ad

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 08 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரமேஷ் ரோடிக் கெம்பிளேஷ் இமான் அஜித் உள்ளிட்ட 8 மீனவர்களும் கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி கடற்படை முகாமில் தங்க வைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர்  மீனவர்களைக் கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இன்று வரை இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.