உக்ரைன் ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்ய எண்ணெய்க்கு ஆப்பு

0
283
Article Top Ad

உக்ரைன் ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

அத்துடன் ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி ஏற்றுமதி ரஷ்யாவிற்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளதுபோதும் இந்த நடவடிக்கை மேற்கத்தைய நாடுகளைப் பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில் மெக்டொனால்ட் மற்றும் கொக்ககோலா ஆகிய பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன.

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.