ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹொக்கி – வேல்சை வீழ்த்தியது இந்தியா

0
238
Article Top Ad

9 ஆவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹொக்கி போட்டி தென் ஆபிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி ஜேர்மனி அணியுடன் மோத உள்ளது.