நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வொஷிங்டன் பயணம்

0
252
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த குழுவில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.

அதன்படி, அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்துக்கு அவர்கள் செல்ல உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெற உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து தவணைகளில் இது இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிலையில் இதன் மூலம் உலக நிதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தால், அவர்களின் முன்மொழிவுகளையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.

அதன்படி, இந்த விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தப்படும் முன்மொழிவுகள் மற்றும் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.