பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

0
419
Article Top Ad

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாமா பன்னெஹேகா தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்துடன் இணைந்து கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.