ஆப்கானில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்பு – பலர் பலி

0
263
Article Top Ad

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.