மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

0
296
Article Top Ad

இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக இராமேஸ்வரத்தை அண்மித்துள்ள சேராங்கோட்டை கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியில் இருந்து இன்று வரை 80 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கைத் தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.