ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் – ஹைதராபாத் அணியில் புதிய இளம் வேகப்பந்து வீச்சாளர்

0
47
Article Top Ad

ஹைதராபாத் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

15 ஆவது ஐ.பி.எல் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தத் தொடரில் ஹைதராபாத் அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சவுரப் துபே காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் மாற்று வீரராக அந்த அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.