Article Top Ad
ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று வியாழக்கிழமை மாலை பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 6 ஆவது தடவையாக பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார்.
1977ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பிரதமராகச் செயற்பட்டுள்ளார். இன்று 6 ஆவது முறை பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.