அரசிலிருந்து விலகிய 10 கட்சிகளும் தொடர்ந்தும் சுயாதீனமாக இயங்கும் – ரணிலுக்கு ஆதரவு இல்லை

0
416
Article Top Ad

“அரசில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது, அவர், “பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதன் மூலம் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்பதில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லை.

இந்த நெருக்கடிக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும். அவரது 4 வருடகால ஆட்சியின்போது 12 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்கள் பெறப்பட்டன” – என்று தெரிவித்தார்.