வசூலில் அமோக சாதனை படைக்கும் Barbie : 17 நாட்களில் 32 000 ($ 1 b) கோடிகளைக் கடந்தது

0
220
Article Top Ad

கடந்த ஐந்து தசாப்த காலமாக பார்பி பொம்மைகள் மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பிரபல அபிமானத்தை திரைப்படமாக எடுத்து என்ற பெயரில் கடந்த மாதம் வெளியிட்டனர். வெளியான அனைத்து இடங்களிலும் சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கின்ற இந்தத் திரைப்படம் மூன்று வாரங்களிலேயே 1.03 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் ($ 1 b = 32, 000  கோடி) தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனி பெண் இயக்குநராக $ 1 b என்ற சாதனையை புரிந்தவர் என்ற பெருமையை இப்படத்தின் இயக்குநர் Greata Gerwig பெற்றுள்ளார்.

பார்பி திரைப்படத்துடன் சேர்த்து இதுவரை 53 திரைப்படங்கள் வசூலில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளன. இதில் நாம் கண்டுகளித்த ஜுரசிக் பார்க், டைடானிக் ,அவெஞ்சர்ஸ், பைரேட்ஸ் ஒப் கரீபியன், அலாடீன் போன்ற திரைப்படங்களும் உள்ளடங்கும்.