40 Kg Cheese உருண்டைகள் வீழ்ந்ததில் நசுங்கி உயிரிழந்த உரிமையாளர்!

0
87
Article Top Ad

களஞ்சியசாலையொன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த Cheese உருண்டைகள் அடுத்தடுத்து மேலே வீழ்ந்ததால் இத்தாலியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

இத்தாலியிலுள்ள பேர்காமோ அருகிலுள்ள ரொமாடியோ டி லம்போர்டியோ என்ற சிறுகிராமத்தில் உள்ளது Grana Padano என்ற Cheese நிறுவனத்தின் களஞ்சியசாலை.

அந்த நிறுவனத்தின் 74 வயதான உரிமையாளர் Giacomo Chiapparini புதிய தானியங்கி Robot இயந்திரத்தைக் கொண்டு எப்படி உருண்டைகளைத் திருப்பிப் போடுவது என பரிசோதித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உருண்டைகள் அடுத்தடுத்து Domino விளைவு மாதிரியாக அவருக்கு மேலே வீழ்ந்ததில் உடல் நசுங்கி பலியானார்.

ஒவ்வொரு உருண்டைகளதும் நிறை 40kg என்பது குறிப்பிடத்தக்கது.