ஜனநாயகன் லீக் விவகாரம்: கோர்டில் முறையிட்ட தயாரிப்பு நிறுவனம்

0
27
Article Top Ad

தவெக தலைவர் விஜய் நடிப்பில் தயாரான அவரது கடைசிப்படமான ‘ஜனநாயகன்’, சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிவராமல் உள்ளது.

இச்சூழ்நிலையில், படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் பொலிஸார், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கசிந்த ஜனநாயகன் படம் கோவையில் உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், விசாரிக்கப்படும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கூறியுள்ளார்.