இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

0
6
Article Top Ad

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது.

தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here