Article Top Ad
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (19) தீர்மானித்துள்ளது.
இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. எனினும, 2027 டிசம்பர் 31 வரை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான விவாதங்கள் தொடரும் அதேவேளை, இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை கட்டணச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை 3.2 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.