Article Top Ad
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாகும்.
ஒடோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகும்.
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் விலை திருத்தத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.