புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு – ஐந்து பேர் எம்.பிகளாக சத்தியப்பிரமாணம்

0
7
Article Top Ad

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்டதுடன், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரன்வல தமது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, சபாநாயகர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

அசோக ரன்வலவின் கல்வி தகமை தொடர்பில் சமூகத்தில் எழுந்து குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பதவி விலகி பின்புலத்திலேயே புதிய சநாயகராக ஜகத் விக்ரமரத்ன  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவரை பரிந்துரைப்பதாக அக்கட்சி நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஒருவரின் பெயரை முன்மொழியாமல் வாக்கெடுப்பின்றி புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபாவும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here