மனிதனின் ஆயுட்காலம் 150 வருடங்களாக அதிகரிக்குமா?

0
77
Article Top Ad

மனிதர்களை 150 வருடங்கள் வாழ வைக்கும் நோக்கில் பல ஆய்வுகள் உலகில் நடைபெற்று வருகின்றன.

பிரபல ரெப் பாடகர் மைக்கல் ஜாக்சன் 150 வருடம் வாழ வேண்டும் என வைத்தியர்கள் வழங்கிய உணவுகளை மட்டுமே உண்டுவந்தார். என்றாலும், 51 வயதில் உயிரிழந்துவிட்டார்.

அண்மையில் சீனாவில் நடைபெற்ற இராணுவ வெற்றிக்கொண்டாட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாாிகதி ஷி ஜின் பிங் ஆகியோர் மனிதர்கள் 150 வருடம் வாழும் ஆராய்ச்சி குறித்து பேசிய காணொளி வைரலாகியது.

நீண்டகாலமாக இந்த ஆய்வுகள் உலக அளவில் இடம்பெற்றுதான் வருகின்றன. ஆனால், அண்மைக்காலமாக இந்த ஆய்வுகள் சற்று வீரியம் பெற்றுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் ரஷ்யாவில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் புதிய கோணத்தில் இதனை மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்யாவை போல சீனாவும் கூட இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.