நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மேலுமொரு பிரிவை இடைநிறுத்த மின்சார சபை கோரிக்கை

0
225
Article Top Ad

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாம் பிரிவில் உள்ள இயந்திரத்தின் பராமரிப்பு செயற்பாடுகளுக்கு நூறு நாட்கள் தேவைப்படும் என்று இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சருக்கு தெரிவித்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் மூன்றாம் பிரிவின் நடவடிக்கைகள் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன் பராமரிப்பு வேலைகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி மின்சக்தி அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 400 பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும் சரினா மெசினரி எஞ்சினியர் கோப்பரேசன் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கவும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதுவரை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பிரிவு செயலிழந்துள்ளது. அதன் புனரமைப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி நிறைவு செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.