கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த மீனவர்கள் தீர்மானம்

0
652
Article Top Ad

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வடமராட்சி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாகப் போராடி வந்த நிலையில் அவர்களின் போராட்டத்துக்கு நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் கடலில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.