குட்டித் தேர்தலை விரைவில் நடத்த ராஜபக்ச அரசு வியூகம்

0
460
Article Top Ad

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ராஜபக்ச அரசு பரீசிலித்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டிருந்தாலும், அரசு நினைக்கும் நேரத்தில் அதற்கான தேர்தலை நடத்த முடியும் .

தற்போதைய சூழ்நிலையில் தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுன்றுக்கு வாய்ப்பில்லை என்பதாலேயே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் பற்றி அதானம் செலுத்தப்பட்டுள்ளது.