நாளையுடன் நிறைவுக்கு வருகின்றது குளிர்கால ஒலிம்பிக் போட்டி

0
360
Article Top Ad

சீனா – பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றது. பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் 91 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் வீரர்கள் 109 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள்.

இது சீனாவில் இடம்பெறும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும். அனைத்து நாடுகளும் முழுமூச்சுடன் பங்கேற்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்றது.

தற்போது இடம்பெறும் இந்தப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. கோடை – குளிர் ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்திய ஒரே நாடு என்ற பெயர் சீனாவுக்கு கிடைக்கவுள்ளது.

2022 ஒலிம்பிக் போட்டி 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை விட பல விதங்களிலும் வேறுபட்டது. இந்த முறை கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

போட்டியாளர்களும் பயிற்சியாளர்களும் ‘பாதுகாப்புச் சிமிழுக்குள் பேணப்படுகிறார்கள். போட்டி முடிந்ததும் சிமிழுக்குள் போய்விட வேண்டும். முதன்முறையாக முற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனியின் மீது போட்டிகள் நடக்கின்றன.