நாடு கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அழிவைச் சந்தித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு பாரியளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாம் கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தோம்.
அதுமட்டுமன்றி நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக்கொடுத்தோம். மருந்துகளின் விலையில் நிலையான தன்மையைப் பேணி மிகவும் குறைந்த விலைக்கு அவற்றைப் பெற்றுக்கொடுத்தோம்.
எரிபொருள் விலையைக் குறைத்து அதற்கான பலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். நாட்டைப் பொருளாதார ரீதியில் மிகச் சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு சென்றோம்” – என்றார்.