தோல்வியை ஏற்றுக்கொண்ட கோட்டா கௌரவமாகப் பதவி விலக வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி அழுத்தம்

0
192
Article Top Ad

“ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர் கௌரவமாகப் பதவி துறக்க வேண்டும்”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. எனினும், ஜனாதிபதி மௌனம் காத்தார். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வந்ததும் அவர் விழித்துக்கொண்டார். மக்கள் கூட்டத்தை கண்டதும் அஞ்சிவிட்டார். அதனால்தான் அர்த்தமற்ற உரையை ஆற்றினார்.

தன்னால் முடியாது, தான் தோல்வி என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே, அவர் கௌரவமாகப் பதவி துறக்க வேண்டும்” – என்றார்.