அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சு

0
399
Article Top Ad

இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.