இளைஞர்கள் 16 பேர் ஓமந்தையில் கைது

0
383
Article Top Ad

வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆவா குழுவின் பதாதைகளைப் பயன்படுத்திக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.