சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக தோமஸ் பக்

0
669
Article Top Ad

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சர்வசே ஒலிம்பிக் குழுவின் (International Olympic Committee – IOC)தலைவராக ஜெர்மனியை சேர்ந்த சட்டத்தரணியான தோமஸ் பக் (Thomas Bach) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

67 வயதான அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள தோமஸ் பக்இ கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பிக்கும் என உறுதிபடக் கூறினார்.