பிரயன் லாரா :அழகியல் துடுப்பாட்டத்தின் அடையாளம்

0
676
Article Top Ad

சிறுவயது முதலே மேற்கிந்தியத் தீவுகள் அணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பிரையன் லாரா வந்த பின்னர் அவரது துடுப்பாட்டத்தை பார்ப்பதென்றால் கொள்ளைப்பிரியம்.

பிரையன் லாராவின் துடுப்பாட்டம் ஏன் தனித்துவமானது என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை நேற்றையதினம் இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் வீரர்களுடனான அரையிறுதிப்போட்டியின் போதும் அதற்குசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் மாஸ்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது அவர் துடுப்பெடுத்தாடிய விதம் உணர்த்தியிருக்கும்.

தற்போது கிரிக்கட் உலகில் அதுவும் டெஸ்ட் போட்டிகளில் 60ற்கும் மேற்பட்ட சராசரியைக் கொண்ட ஸ்டீவன் ஸ்மித் மார்னஸ் லபுஷேன் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். ஜோ ரூட்இகேன் வில்லியம்ஸன்இ வீராத் கோலி போன்ற ரன் குவிப்பு மெஷின்கள் இருக்கின்றனர். ஆனாலும் இவர்களிடம் இல்லாத சிறப்புத்தன்மை பிரையன் லாராவிடமே காணப்பட்டது.

அது தான் துடுப்பாட்ட அழகியல். பிரையன் லாரா ஆடுகளத்திற்கு நடந்துவருபோது ஓர் அழகு. ஆடுகளத்தில் நிலை எடுத்துக்கொள்ளும் போது ஓர் அழகு. துடுப்பை உயர்த்தி பின்னர் பந்திற்கு துடுப்பைக்கொண்டுவரும் போது அலாதி அழகு. ஒற்றைக்காலில் நின்று கொண்டு ‘புள் ஷொட்’ அடிக்கும் போது அட்டகாச அழகு. இப்படி ஒவ்வொரு ஷொட்களுக்குமே அடுக்கிக்கொண்டுபோகலாம்.

லாராவின் காலத்தில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இரிக்கி பொன்டிங்இஜக் கலீஸ்இ ராகுல் ட்ராவிட் ஆகியார் லாராவை விட அதிக ஓட்டங்களைக் குவித்தபோதும் ரசிகர் கள் மனங்களில் அவர் தனித்தட்டில் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவர் குவித்த ஓட்டங்களைத் தாண்டி அவற்றைக் குவித்த விதமாகும்.
தற்போதெல்லாம் ஸ்டீவன் ஸ்மித்இ மார்னஸ் லபுஷேன் போன்ற வீரர்களின் துடுப்புக்களில் இருந்து ரன்கள் குவிகின்ற போதும் அவர்கள் ஆடுகளத்தில் நிற்கும் போதும் துடுப்பெடுத்தாடும் போதும் பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பது எனக்குமட்டுமல்ல பலருக்கும் தான்.

குமார் சங்ககாரவின் துடுப்பாட்டமும் சிறப்பானது அவர் ஷொட்களை அடிக்கும் போதும் மிகவும் அபாரமாக இருக்கும் என்று கிரிக்கட் வர்ணனையாளர்கள் ரசிகர்கள் புகழாரம் சூடியுள்ளதை மறுக்கமுடியாது . ஆனால் பிரையன் லாராதான் குமார் சங்கக்காரவிற்கு மிகவும் பிடித்தமான வீரர் என்கின்ற போது லாராவின் மீதான பிடிப்பு பன்மடங்காக கூடிவிடுகின்றது.

தற்போது துடுப்பெடுத்தாடும் வீரர்களில் ரோஹிட் சர்மா, பாபர் அஸாம் ,போன்றவர்களது துடுப்பாட்டத்தில் ஒருவித அழகு இருப்பது உண்மையே என்றாலும் பிரையன் லாராவிற்கு எவருமே இணையாகமாட்டார்கள் என்றால் அதனைப் பலரும் ஆமோதிப்பர் என்பது எனது கருத்தாகும். உங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் இங்கே பதிவிடவும்.