ஊடக சுதந்திரம் உண்மையில் யாருடைய சுதந்திரம் ?

0
589
Article Top Ad

 

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் விடுத்துள்ள எச்சரிக்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை ஆற்றிய பணிகளைப் பார்த்தால் அவரால் எதனையும் செய்யமுடியாது என்பதைக் காண்பிப்பதாக ‘ சேர் .ஃபெயில்’ என்று கோஷங்களைக் கிளப்பி உரையாற்றிய நிலையில் தமக்கு எதிராக போரிட்ட பிரபாகரனை கொன்று நாய் போன்று இழுத்துவந்ததாக கூறி தம்மால் வேறுவிதமாகவும் நடந்துகொள்ள முடியும் எனக்கூறியிருந்தார். தற்போது காடழிப்பு தொடர்பாகவும் சீனி ஊழல் தொடர்பாகவும் ஊடகங்களில் குறிப்பாக சிரச வலையமைப்பு ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகி மக்களின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் ஊடகங்கள் மீதான கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் எச்சரிக்கை உண்மையில் நடைமுறைப்படுதப்படுமா என்பது கேள்விக்குரியது. ஆனால் யுத்தம் நடைபெற்றபோதும் அதன் பின்னர் வந்த ஆண்டுகளிலும் ஊடகங்கள் மீது திணிக்கப்பட்ட அழுத்தத்தையும் பிரயோகிக்கப்பட்ட அடக்கு முறைகளையும் எண்ணிப்பார்த்தால் ஊடகவியலாளர்களும் மனித உரிமைகளுக்காகவும் இயற்கை உட்பட ஏனைய உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் அனைவரது அச்சங்களிலும் உள்ள ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்

ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் மோசமான நிலைக்கு சென்றுள்ளமைகாரணமாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ரீதியில் கடுமையான நெருக்கடிகளைக் இலங்கை எதிர்நோக்கியிருக்கும் நிலையிலும் ஆட்சியாளர்களது செல்வாக்கு சரிவடையும் நிலையில் உள்நாட்டுப் பிரச்சனைகளையும் ஊடகங்கள் அக்குவேறு ஆணிவேறாக காண்பித்தால் அதிகாரத்திலுள்ளவர்கள் அச்சமடைவதற்கு காரணமுண்டு. அதனையே ஜனாதிபதியின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. ஊடகங்கள் தமது குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது எதிர்கால அரசியல் இருப்பிற்கு ஆப்பாக அமைந்துவிடலாம் என ஆட்சியாளர்கள் கருதுவதே கடும்போக்குடைய கருத்துக்களும் நகர்வுகளும் வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பதைக் கூறுவதற்கு மேதைகள் தேவையில்லை. ஜனாதிபதி ஊடக சுதந்திரம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்துகொள்வதற்கு

 

“ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால்இ அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும்இ அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர் என்றார்.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவ்வித அழுத்தங்களையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதிஇ பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவை யின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முயற்சித்தால் அத்தகையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்திற்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 15வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அதிகாரிகளின் பொறுப்பு மக்களின் வாழ்க்கைக்கான வழிகளை செய்து கொடுப்பதாகும். ஒருபோதும் அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடாது. மக்கள் வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் வகையிலான எவ்வித செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளிடம் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன். சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவஇ மாத்தளைஇ லக்கலைஇ ரிதிகமஇ வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வறுமையை ஒழித்து கிராமிய மக்களை பொருாளதார ரீதியாக முன்னேற்றவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும். 75 வீதமாக உள்ள கிராமிய மக்களில் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 35இ000 பேருக்கு தற்போது தொழில்கள் வழங்கபபட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது சரியான ஆட்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பது நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.”