ரஷ்யாவின் ஜனாதிபதியாக 2036 வரை புட்டின் ?

0
603
Article Top Ad

ரஷ்யாவின் ஜனாதிபதியாக மேலும் இரண்டு தடவைகள் பதவியில் இருக்கும் வகையிலான சட்டத்தில் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார். அவரது தற்போதைய ஜனாதிபதி பதவிக்காலம் 2024ம் ஆண்டுடன் நிறைவடைகின்றது.

தற்போது புட்டின் கைச்சாத்திட்டுள்ள சட்டத்தின் படி 2024 ம் ஆண்டிற்கு அப்பால் மேலும் இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் .

1999ம்ஆண்டில் இருந்து 2000 ம் ஆண்டுவரை முதலில் ரஷ்யாவின் பிரதமராக இருந்த விளாடிமீர் புட்டின் 2000ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவிவகித்திருந்தார்.

இரண்டு தடவைக்கு மேலாக பதவியிலிருக்க முடியாத நிலையில் தனக்கு நெருக்கமான டிமிற்றி மெட்வடேவை ஜனாதிபதியாக்கிவிட்டு 2008 முதல் 2012 வரை பிரதமராக பதவிவகித்திருந்தார்.

பின்னர் சட்டத்தில் திருத்தம் செய்து 2012ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாக மீண்டும் பதவிவகித்துவருகின்றார்.

அவரது பதவிக்காலம் 2024ம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையிலேயே தற்போது மேலும் இருதடவை பதவியில் இருக்கத்தக்க வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 2036ம் ஆண்டுவரை புட்டின் ஜனாதியாகத் தொடர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.