கடந்த சில வருடங்களில் தென்னிந்திய மொழிப்பாடல்களில் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களை நன்கு ஆராய்ந்தால் அதில் சில முக்கியமான விடயங்கள் புலனாகும்.
ஒன்று சாய் பல்லவியின் நடனம் இடம்பெற்றிருக்க வேண்டும் அன்றேல் பாடகி தீ பாடியிருக்க வேண்டும்.
ஏனெனில் அவர்கள் இருவரது பங்களிப்புடன் கூடிய பாடல்களே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் 100 மில்லியன் எண்ணிக்கையைக் கடந்துள்ளன.
மாரி 2 படத்தில் தனுஷ் சாய் பல்லவி நடனத்திலும் தனுஷ் தீ ஆகியோர் குரல்களிலும் பாடி வெளியான ரவுடிபேபி பாடல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற சாதனையை யூடியூபில் புரிந்துள்ளது.
இதுவரை ஏறத்தாழ 120 கோடி பேர் இந்தப்பாடலைப் பார்த்துள்ளனர்.
அதுபோன்று கடந்த மாத ஆரம்பத்தில் தீ மற்றும் அறிவின் குரலில் வெளியான எஞ்ஜோய் எஞ்சாமி பாடலை இதுவரை 114 மில்லினுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்தப்பாடலுக்கு ஒருவாரத்திற்கு முன்னர் வெளியாகியிருந்த பாடகி மங்லி குரலில் சாய் பல்லவி நடனத்தில் வெளியான சாரங்க தரியா என்ற பாடலை இதுவரை 115 மில்லியனுக்கு அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஞ்ஜோய் எஞ்சாமி பாடலை எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ அதுபோன்றே டிக்டொக் யூடியூப்பில் தமக்கு பிடித்தமான விதத்தில் பாடி ஆடி ரசிகர்கள் மகிழ்வதைக் காணமுடிகின்றது.