சிறுபான்மையினச் சமூகங்களைப் பழிவாங்காதீர்! – அரசிடம் அமெரிக்கா வலியுறுத்து

0
514
Article Top Ad

 

 

“இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சி முறையின் ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளைப்  பாதுகாக்க வேண்டும். சிறுபான்மையினச் சமூகங்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கை அரசுகளால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கின்றது” – என்று குறிப்பிட்டுள்ளார்.
……..