கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா உட்பட பல நாடுகளும் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் நிலையில்,
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் வெறுமனே 20 புதிய கொரோனா தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.
இந்தக்காலப்பகுதியில் ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளது. முந்திய நாளில் வெறுமனே 14 தொற்றாளர்களே பதிவாகியிருந்தனர். இதேகாலப்பகுதியில் இந்தியாவில் 324,624 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேகாலப்பகுதியில் 2,585 மரணங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
கொரோனா தொற்று ஆரம்பமாகிய சீனாவில் இதுவரையில் 90 642 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை மொத்தமாக 4,636 பேர் மாத்திரமே பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் ஆரம்பித்தது முதலாக இந்தியாவில் 18,692,720 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 207,397பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.