மாலைதீவின் தற்போதைய சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டை இலக்கு வைத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (06) இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விடுத்துள்ள ட்விற்றர் பதிவில், குண்டு வெடிப்பை அடுத்து, அவர் தலைநகர் மாலேயிலுள்ள ADK வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது காருக்குள் ஏற முற்பட்ட வேளையில் குறித்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் எவரும் வர வேண்டாமெனவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
இதேவேளை, கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரில் இன்று (06) முதல்இ இரவு 9.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.