ஆபத்து கட்டத்திலுள்ள இலங்கைக்கு அதிர்ச்சியளிக்கும் இந்திய வைரஸ் செய்தி

0
323
Article Top Ad

 

இலங்கை கடந்த மூன்று வாரங்களாக சடுதியான கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பினால் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றையதினம் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபானது (B.1.617) இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற செய்தியே அதுவாகும்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்இ கடந்த மே 06ஆம் திகதி பெறப்பட்ட மாதிரி ஒன்றில்இ B.1.617.2 எனும் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தரவுகளின் அடிப்படையில் இது B1.1.7 எனும் திரிபுக்கு சமனானது என, அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கு நல்ல் செய்தி அல்ல என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியில் குறித்த திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

இந்தியாவில்தினமும் பல இலட்சம் பேரிடையே பரவி வரும் கொவிட்-19 திரிபானது, மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதுடன், தினமும் அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இத்திரிபைக் கொண்டுள்ள தொற்றாளர்களுக்கு, சுவாச சிக்கலை உச்ச அளவில் ஏற்படுத்தி, உடலுக்கான ஒட்சிசனை உச்ச அளவில் பயன்படுத்துவதால், ஒட்சிசனின் தேவை அதிகரிக்கச் செய்வதால், விரைவான மரணத்திற்கு அது இட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேல் மாகாணத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆழ ஊடுருவியுள்ளது.

அங்கு நேற்று மாத்திரம் 1,393 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 434 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 591 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 368 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அன்றாட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சுத்தம் சமரவீர இமேற்படி வைரஸ் தொற்று நோயாளர்களின் அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய திரிபு வகை கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம் சுகாதார அமைச்சின் கல்வி மேம்பாட்டுப் பிரிவில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தற்போது அதி வேகமாக பரவும் இலங்கைத் திரிவும் இனங்காணப்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்கள் இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.