இலங்கையில் இன்று மட்டும் 2,269 பேருக்குக் கொரோனா!

0
175
Article Top Ad

இலங்கையில் இன்று மாத்திரம் 2 ஆயிரத்து 269 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 26 ஆயிரத்து 126 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.