இலங்கையில் மேலும் 19 பேர் சாவு! – கொரோனா காவு 981 ஆக உயர்வு

0
303
Article Top Ad


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இந்த மாதம் (மே) 1ஆம் திகதி முதல் இன்று 17ஆம் திகதி வரை 303 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினமும் 2000ற்கு அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று மாத்திரம் 2456 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.