இலங்கையில் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,623 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதேவேளை நேற்றையதினம் 2518 தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் 1100ம் அதிகமாக மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தொற்றாளர்களுடன் இலங்கையின் புதுவருட கொத்தணி 50000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இலங்கையில் மூன்றாவது கடந்த மாத இறுதியளவில் தீவிரம் பெற்றதை அடுத்து மே 9 ம் திகதி முதலாக தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியிருந்தது.
இன்றைய தினம் முதற்தடவையாக அவ்வெண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் அடுத்துவரும் 100 நாட்களில் இலங்கையில் ஒரு மில்லியன் அளவிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றையதினம் 36 கொரோனா உயிரிழப்புக்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனுடன் மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1051 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.