இன்றையதினம் 38 கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்கள் இலங்கையில் வெளியாகின

0
261
Article Top Ad

இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 363ஆக அதிகரித்துள்ளது

இதனிடையே இன்றையதினம் 2,845 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்துப் பார்க்கும் போது தற்போது மொத்தமாக 30,019 தொற்றாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.